|
25
|
அதிரா மரபின் யாழ்கை
வாங்கி
மதுர கீதம் பாடினள் மயங்கி
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி
நன்பால் அமைந்த இருக்கைய ளாகி
|
|
(அதிராமரபின்............இருக்கையாளாகி)
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி - ஒன்பது வகைப்பட்ட இருப்பினுள் முதற்கண்ணதாகிய,
நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி - பதுமாசனம் என்னும் நன்மை யமைந்த இருப்பினை யுடையளாய்,
அதிரா மரபின் யாழ் கை வாங்கி - கோவை கலங்காத மரபினையுடைய யாழைக் கையில் வாங்கி,
மதுர கீதம் பாடினள் மயங்கி -மிடற்றாலே முற்பட மதுர கீதமாகப் பாடி அது மயங்கிக் கலத்தாற்
பாடத் தொடங்கினவள் ;
இருக்கையளாகி வாங்கிப்
பாடினள் மயங்கி என மாறுக. விருத்தி - இருப்பு. நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதல்
என்பவற்றுள் இருத்தலின் பிரிவாகிய திரிதர வில்லா விருக்கை ஒன்பது வகைப்படும். அவை:
பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படி இருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம்,
மண்டிலம், ஏகபாதம் என்பன. இவற்றுள் முதற்கண்ணதாகிய பதுமுகம் என்பதே தலைக்கண் விருத்தி
யெனப்பட்டது. பதுமுகம் - பதுமாசனம். மேல் யாழாற் பாடுதல் கூறப்படுதலின் ஈண்டுப் பாடியது
கண்டத்தா லென்பது பெற்றாம்.
. |
|