8. வேனிற் காதை


30

செம்பகை யார்ப்பே கூடம் அதிர்வே
வெம்பகை நீக்கும் விரகுளி யறிந்து



29
உரை
30

         செம்பகை ஆர்ப்பே அதிர்வே கூடம் வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து - செம்பகை ஆர்ப்பு அதிர்வு கூடம் என்னும் இப் பகை நரம்பு நான்கும் புகாமல் நீக்கும் விரகைக் கடைப்பிடித் தறிந்து ;

         செம்பகை முதலிய குற்றங்களினியல்பை, "செம்பகை யென்பது பண்ணோ டுளரா, இன்பமி லோசை யென்மனார் புலவர்" "ஆர்ப்பெனப் படுவ தளவிறந் திசைக்கும்" "அதிர்வெனப் படுவ திழுமென லின்றிச், சிதறி யுரைக்குந ருச்சரிப் பிசையே" "கூட மென்பது குறி யுற விளம்பின், வாய்வதின் வராது மழுங்கியிசைப் பதுவே" என்பவற்றானறிக. இவை மரக்குற்றத்தாற் பிறக்கும்: என்னை? "நீரிலே நிற்ற லழுகுதல் வேத னிலமயக்குப், பாரிலே நிற்ற லிடிவீழ்த னோய்மரப் பாற்படல்கோள், நேரிலே செம்பகை யார்ப்பொடு கூட மதிர்வுநிற்றல், சேரினேர் பண்க ணிறமயக் குப்படுஞ் சிற்றிடையே" என்றாராகலின்.
.