மூலம்
8. வேனிற் காதை
பிழையா மரபின் ஈரேழ் கோவையை
உழைமுதற் கைக்கிளை இறுவாய் கட்டி
31
உரை
32
பிழையா மரபின் ஈரேழ்கோவையை - மயங்கா மர பினையுடைய பதினாற்கோவையாகிய சகோட யாழை, உழை முதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி-உழை குரலாகக் கைக்கிளை தாரமாகக் கட்டி ;