8. வேனிற் காதை


இணைகிளை பகைநட் பென்றிந் நான்கின்
இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக

33
உரை
34

       இணை கிளை பகை நட்பு என்று இந் நான்கின் - இணையும் கிளையும் பகையும் நட்புமாகிய இந்நான்கினுள், இசை புணர் குறி நிலை எய்த நோக்கி - இசை புணருங் குறிநிலையைப் பொருந்த நோக்கி;

       இணை - இரண்டு நரம்பு, கிளை ஐந்து நரம்பு, என்பர். பகை ஆறும் மூன்றும். நட்பு - நாலாம் நரம்பு. "இணையெனப் படுவ கீழு. மேலும், அணையத் தோன்று மளவின வென்ப" "கிளையெனப் படுவ கிளக்குங் காலைக், குரலே யிளியே துத்தம் விளரி, கைக்கிளை யென வைந் தாகு மென்ப" "நின்ற நரம்பிற் காறு மூன்றுஞ், சென்றுபெற நிற்பது கூட மாகும்" என்பன காண்க. கிளை - ஐந்தாம் நரம்பென்றலும், இணை - இரண்டாம்நரம்பும் ஏழாம்நரம்பும் என்றலும் பொருத்தமாம்.

.