9. கனாத்திறமுரைத்த காதை

கண்ணகி நல்லாளுக் குற்ற குறையுண்டென்
றெண்ணிய நெஞ்சத் தினையளாய் நண்ணி
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று
பெறுக கணவனோ டென்றாள் பெறுகேன


41
உரை
44

       வாட்டருஞ் சீர் - குறைதலில்லாத புகழையுடைய, கண்ணகி நல்லாளுக்கு - கண்ணகியாகிய நங்கைக்கு, உற்ற குறையுண்டு என்று - கணவன் பிரிதலால் உற்றதோர் துன்பமுண்டென்று, எண்ணிய நெஞ்சத்து இனையளாய் - நினைந்த நெஞ்சின் வருத்தத்தை யுடையளாய், நண்ணி - கோயிலை யடைந்து, அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய் - அறுகு முதலியவற்றை இவள் கணவனைப் பெறல் வேண்டுமெனத் தூவி வழிபட்டு, சென்று - கண்ணகிபாற் போய், பெறுக கணவனோடு என்றாள்- கணவனைப் பெறுவாயாகவென வாழ்த்தினாள் ;

       வாடு வாட்டென விகாரமாயிற்று. வாடுதல் - குறைதல். பிறராற் கெடுத்தற்கரிய என்றுமாம். இனைதல் - வருந்துதல் ; இனைதல் இனையென்றாயிற்று ; விகாரம். கணவனோடு - வேற்றுமை மயக்கம். கண்ணகிபாற் சென்று நண்ணித் தூவிப் பெறுக வென்றாள் எனினு மமையும்.