|
65 |
காவலன் போலுங் கடைத்தலையான்
வந்துநம்
கோவல னென்றாளோர் குற்றிளையாள் கோவலனும் |
|
நீடிய
காவலன் போலும் - பெருமையுடைய நம் அரசன் போலும், சடைத்தலையான் வந்து - வந்து நம்
வாயிலிடத்தானாயினான்; நம் கோவலன் என்றாள் ஓர் குற்றிளையாள் - அவன் நம் கோவலனே
என்றாள் ஓர் குறுந்தொழில் செய்யும் இளையவள் ;
தூரத்தே பார்த்துக் காவலன் போலுமென
ஐயுற்று அவன் அணுகினவிடத்து ஐயம் தீர்ந்து கோவலன் என்றாள். காவலன் போலும் கோவலன்
வந்து நீடிய கடைத்தலையான் என்றுரைத்தலுமாம். குற்றிளையாள் என்றாளென்க. |
|