9. கனாத்திறமுரைத்த காதை




70
பாடமை சேக்கையுட் புக்குத்தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தங்கண் டியாவுஞ்
சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த
இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன


67
உரை
71

       கோவலனும் - அங்ஙனம் வாயிலிடத்தானான கோவலனும், பாடு அமை சேக்கையுட் புக்கு - பெருமையமைந்த படுக்கையிடத்தே புக்கு, தன் பைந்தொடி வாடிய மேனி வருத்தம் கண்டு - தன் காதலியின் வாட்ட முற்ற மேனியும் வருத்தமும் கண்டு, யாவும் - எல்லாம், சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி - வஞ்சம் பொருந்திய கொள்கையையுடைய பொய்த்தியோடுங் கூடியொழுகினமையால், குலம் தருவான் பொருட்குன்றம் தொலைந்த - நம் குலத்திலுள்ளார் தேடித் தந்த மலைபோலும் பெரிய பொருட்குவையெல்லாம் கெட்டதனாலாய, இலம்பாடு - வறுமை, நாணுத் தரும் எனக்கு என்ன - எனக்கு நாணைத் தருகின்றது என்று கூற ;

       "மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர், கோலங் கொடியிடையார் தாங்கொள்ள" அக் காலத்தே வந்து சேக்கையுட் புக்கு என்றியைத் துரைக்க. சலம் - வஞ்சம், பொய். இலம்பாடு - இல்லாமையுண்டாதல் ; வறுமை. கெட்டால் மதிதோன்றும் என்றதற்கேற்ப இன்று நாணுத் தருமென்றான்.