|
|
நலங்கேழ் முறுவல் நகைமுகங்
காட்டிச்
சிலம்புள கொண்மெனச் சேயிழை கேளிச் |
|
நலங்கேழ்
முறுவல் நகைமுகம் காட்டி - (அவன் இங்ஙனம் கூறியதனை மாதவிக்குக் கொடுக்கும் பொருட்
குறை பாட்டால் தளர்ந்து கூறினானாகக் கருதி) ஒளி பொருந்திய முகத்தே நன்மை பொருந்திய
சிறிய முறுவலைத் தோற்றுவித்து, சிலம்பு உள கொண்மென - இன்னும் சிலம்பு ஓரிணை உள்ளன
; அவற்றைக் கொண்மினென்றுரைக்க ;
சிலம்புள என்றாள் ; இவை யொழிந்த
கலனெல்லாம் தொலைதலால். கொண்ம் - கொள்ளும் என்பதன் ஈற்று மிசை யுகரம் மெய்யொடுங்
கெட ளகரம் திரிந்தது. |
|