9. கனாத்திறமுரைத்த காதை


15
தேவிர்காள் எம்முறுநோய் தீர்மென்று மேவியோர்
பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்


14
உரை
15

       தேவிர்காள் - தெய்வங்களே, எம் உறுநோய் - எம்மையுற்ற இத்துன்பத்தை, தீர்ம் என்று - தீர்ப்பீராகவென்று கூறிக் கொண்டு சென்று, மேவி ஓர் பாசண்டச் சாத்தற்கு - ஓர் பாசண்டச் சாத்தன் கோயிலை அடைந்து அவன்பால். பாடுகிடந்தாளுக்கு - வரங்கிடந்தாளுக்கு ;

       தேவு - தெய்வம் ; இர் - முன்னிலைப் பன்மைவிகுதி. உறு - மிக்க என்றுமாம். தீர்ம் - தீரும் என்பதன் ஈற்று மிசை யுகரம் கெட்டது. தீர்மினென்று இரப்பவும் ஒருவரும் தீராமையின் அவ்விடங்களி னீங்கிச் சாத்தன் கோயில் மேவியென்று விரித்துரைத்தலுமாம். பாசண்டம் - தொண்ணூற்றறுவகைச் சமய சாத்திரத்தருக்கக் கோவை என்பர். "பாசண்டத் துறையு மிவற்றுட் பலவாம், பேசிற் றொண்ணூற் றறுவகைப் படுமே" என்பது திவாகரம். இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றவனாகலின் மகா சாத்திரன் என்பது இவற்குப் பெயராயிற்று என்பர். கிடந்தாளுக்கு - கிடந்தாளை ; உருபு மயக்கம்.