|
30 |
மறையோன்பின் மாணியாய்
வான்பொருட் கேள்வித்
துறைபோ யவர்முடிந்த பின்னர் இறையோனும்
தாயத்தா ரோடும் வழக்குரைத்துத் தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள் |
|
தூய
மறையோன் பின் மாணியாய் - இருமரபுந் தூய மறையோனுக்குப்பின் செல்லும் பிரமசாரியாய்,
வான் பொருட் கேள்வித் துறை போய் - சிறந்த கல்வியிலும் கேள்வியிலும் துறை போகி,
அவர் முடிந்த பின்னர் - தந்தை தாயர் இறந்த பின்பு, இறையோனும் - குழவியாய் வந்த
சாத்தனும், தாயத்தாரோடும் வழக்குரைத்து - தன் ஞாதிகளோடும் வெல்வழக் குரைத்து, தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து - தந்தை தாயர்க்குச் செய்ய வேண்டிய நீர்க்கடன்
முதலியவற்றைச் செய்து முடித்து, மேய நாள் - தன் மனைவியோடே கூடி வாழ்ந்தபின் ஒருநாளில்
;
வான்பொருள்
- கல்வி. அவர் - தந்தையும் தாயரும். தாயர் என்றார் மாலதியையுங் கூட்டி. வழக்குரைத்து
எனவே, தன் மனைவிக்குப் பொருட்குறைபாடில்லாமற் செய்து என்பதாயிற்று. இறையோனும் மாணியாய்த்
துறைபோய் அவர் முடிந்த பின்னர்க் கடன் கழித்து வழக்குரைத்து மேவிய பின் ஓர் நாள்
என்க. மேவினாள் என்று பாடங் கொண்டு தன்னை மேவினவள் என்றுரைப்பர் அரும் பதவுரை யாசிரியர். |
|