|
35 |
தேவந்தி யென்பாள்
மனைவி அவளுக்குப்
பூவந்த வுண்கண் பொறுக்கென்று மேவித்தன்
மூவா இளநலங் காட்டியெங் கோட்டத்து
நீவா வெனவுரைத்து நீங்குதலுந் தூமொழி |
|
தேவந்தி
என்பாள் மனைவி அவளுக்கு - தன் மனைவியாகிய தேவந்தி யென்று பெயர் கூறப்படும் அவளுக்கு,
பூ வந்த உண்கண் பொறுக்கென்று - பூவின்றன்மையுடைய மையுண்ட கண் இதனைப் பொறுப்பதாக
என்று நிருமித்து, மேவி - பின்பு அவளைப் பொருந்தி, தன் மூவா இள நலம் காட்டி - தனது
என்றும் மூத்தலில்லாத இளைய அழகினை வெளிப்படுத்தி, எம் கோட்டத்து நீ வா என உரைத்து
நீங்குதலும் - நீ எமது கோட்டத்திற்கு வாவெனச் சொல்லி நீங்கினானாக ;
மக்கள்
கண் தெய்வ யாக்கையைக் காணப்பொறாதாகலின் இவள் கண் பொறுக்க வென்று விதித்தனன்.
தன் மூவா இளநலம் - தனது தெய்வ யாக்கையின் நலம் ; 1
"மணங்கமழ் தெய்வத் திள நலங் காட்டி" என்றார் திருமுருகாற்றுப்படையினும். சாத்தன்
தேவந்தியுடன் எட்டியாண்டு வாழ்ந்து, பின்பு இங்ஙனம் நீங்கினன் என மேல் 2
வரந்தரு காதையுட் கூறப்பட்டுளது. |
1
திருமுரு, 290. 2
சிலப். 30. 78-87.
|
|