|
40 |
ஆர்த்த கணவன் அகன்றனன்
போயெங்கும்
தீர்த்தத் துறைபடிவே னென்றவனைப் பேர்த்திங்ஙன்
மீட்டுத் தருவா யெனவொன்றன் மேலிட்டுக்
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டருஞ்சீர்க் |
|
தூமொழி
- தூய மொழியினை யுடையளாய தேவந்தி, ஆர்த்த கணவன் - எனது நெஞ்சினைப் பிணித்த கணவன்,
அகன்றனன் போய் எங்கும் தீர்த்தத் துறை படிவேன் என்று - தீர்த்தத் துறைகளெங்கும்
போய்த் தீர்த்த மாடுவேன் என்று என்னை விட்டு நீங்கினன் ; அவனைப் பேர்த்து இங்ஙன்
மீட்டுத் தருவாய் என - அவனை மறித்தும் இவ்விடத்தே அழைத்துத் தருவாயென, ஒன்றன்மேல்
இட்டு - ஒரு பெயரிட்டுக் கொண்டு, கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் - அவன் கோயிலை
நாடோறும் வழிபடுதலைக் கடனாகக் கொண்டிருப்பவள் ; |
|