குடதிசைக் கொண்டு கொழும்புனற்
காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து
34
உரை
35
கொழும்
புனற் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து - வளவிய நீரினையுடைய காவிரியின்
பெரிய வடகரைக்கணுள்ள சோலையினைக் கடந்து ; நுழைதல் - கழிதல். அன்றிச் சோலை தாழ்ந்திருத்தலின்
நுழைந்து போய் எனலுமாம்.