10. நாடுகாண் காதை



ஆறைங் காதநம் மகனாட் டும்பர்
நாறைங் கூந்தல் நணித்தென நக்குத்



42
உரை
43

       ஆறைங் காதம் நம் அகல்நாட் டும்பர் நூறு ஐங் கூந்தல் நணித்து என நக்கு - கோவலன் நீ வினவிய மதுரை நமது அகன்ற நாட்டிற்கு அப்பால் ஆறைந்து காதத்துள்ளது இனி அண்ணிது என்று கூறி நகைத்து ;

       முப்பது காதமென்னும் பொருள் மறைந்து, ஆறு அல்லது ஐந்து காதம் என்னும் பொருள் தோன்ற 'ஆறைங்காத' மென்றான். நகை - துன்ப நகை ; பிறர்கட் டோன்றிய பேதைமை காரணமாகத் தோன்றிய நகையுமாம். கூந்தல், விளி.