|
45
|
தேமொழி தன்னொடுஞ் சிறையகத்
திருந்த
காவுந்தி யையையைக் கண்டடி தொழலும
|
|
தே
மொழி தன்னொடும் சிறையகத்து இருந்த காவுந்தி ஐயையைக் கண்டு அடி தொழலும் -தேனை யொத்த
மொழியினையுடைய கண்ணகியொடும் சென்று பள்ளியகத்திருந்த கவுந்தி யடிகளைக் கண்டு அடிவணங்குதலும்
;
சிறை - தவவேலி என்பர் அடியார்க்கு
நல்லார், ஐயை - ஐயன் என்பதன் பெண்பால். கழிந்து கழிந்து போகிக் கொண்டு நீங்கிப்
போகிக் கழிந்து நுழைந்து நடந்து பொருந்த நறும்பல் கூந்தல் இனைந்து வருந்தி உயிர்த்து
வினவ நணித்தென நக்குக் கண்டு அடி தொழலுமென்க. |
|