10. நாடுகாண் காதை

50

உரையாட் டில்லை யுறுதவத் தீர்யான்
மதுரை மூதூர் வரைபொருள் வேட்கையேன



50
உரை
51

 

       உரையாட்டு இல்லை உறுதவத்தீர் யான் மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன் - மிக்க தவத்தினை யுடையீர் இவ் வினாவிற்கு யான் சொல்லத்தக்க தொன்றில்லை ஆயினும் மதுரை மூதூரிற் சென்று பொருளீட்டும் வேட்கையை உடை யேனாயினேன் என்று கூற ;

       "1 சென்ற கலனோடு உலந்த பொருளீட்டுதலுற்றேன்" என இவன் முன்னர்க் காதையில் கூறியவதனால் 'வரை பொருள்' என் பதற்குத் தான் தேடுவதாக அறுதி செய்து கொண்ட பொருள் என்க. எனவென ஒரு சொல் வருவிக்க. இனிக் கவுந்தியடிகள் கூறுவார்.

1. சிலப். 9: 74--5.