10. நாடுகாண் காதை

55

உரிய தன்றீங் கொழிகென வொழியீர



55
உரை
55

       உரியதன்று ஈங்கு ஒழிகென ஒழியீர் - இவை அன்றியும் இவளை உடன்கொண்டு சேறல் ஏற்புடைத்தன்று ஆகலின் இனிச் செலவை ஒழிமின் என யான் ஒழிப்பவும் ஒழிகின்றி லீர் ;

       இவர்க்கு மேல் நிகழ்வதறிந்து ஒழிகெனக் கூறினாரெனின், அடைக்கலக் காதையுள் ஒரு பொழுதிற்கு ஓம்படை பல கூற வேண்டாமையின் இவர்க்குத் தவத்தினாலே சபித்தலன்றிக் காலவுணர்ச்சியின்மை உணர்க வென்பர் அடியார்க்கு நல்லார்.