|
|
மறவுரை நீத்த மாசறு கேள்வியர்
அறவுரை கேட்டாங் கறிவனை யேத்தத்
தென்றமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்
கொன்றிய வுள்ள முடையே னாகலின்
|
|
மற
உரை நீத்த மாசறு கேள்வியர் - மற வுரைகளை நீக்கிய குற்றமற்ற கேள்விப் பயனை உடையவர்தம்,
அற உரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த - அறவுரைகளைக் கேட்டு அக் கேட்டவாறே அருக தேவனை
யேத்துதற்கு, தென்றமிழ் நன்னாட்டுத் தீது தீர் மதுரைக்கு - தெற்கின்கணுள்ள தமிழ் நாட்டின்
கண்ணதாகிய குற்றந் தீர்ந்த மதுரைக்குச் செல்வதற்கு, ஒன்றிய உள்ள முடையேன் ஆகலின்
- ஒருப்பட்ட உள்ள முடையேனாகலின், போதுவல் யானும் போதுமின் என்ற காவுந்தி ஐயையைக்
கைதொழுது ஏத்தி - யான் செல்வேன் நீவிரும் வம்மின் என்று கூறிய கவுந்தி யடிகளைக் கையான்
வணங்கி நாவாற் போற்றி, அடிகள் நீரே அருளுதிராயின் இத்தொடிவளைத் தோளி துயர் தீர்த்தேன்
என - அடிகளே நீரே இன்னணம் அருள் செய்வீராயின் இவ் வளைந்த வளையை அணிந்த தோளினையுடையாளது
துன்பமெல்லாம் போக்கினேனாவேனென்று சொல்ல ;
மதுரைக்குச் செல்லவென ஒருசொல் விரித்துரைக்க.
தொடி - வளைவு. 1 "தொடிக்கட் பூவை"
என்பது காண்க. தீர்த்தேனென இறந்த காலத்தாற் கூறினான், கவுந்தியடிகளின் அருள் உண்டென்னும்
தெளிவு பற்றி.. |
1.
சீவக. 932.
|
|