10. நாடுகாண் காதை


65

கோவலன் காணாய் கொண்ட விந்நெறிக்
கேதந் தருவன யாங்கும்பல கேண்மோ



64
உரை
65

        கோவலன் காணாய் - கோவலனே நீ இதனை யறியாய், கொண்ட இந் நெறிக்கு ஏதம் தருவன யாங்கும் பல - நாம் செல்ல நினைந்த இவ் வழியின் கண் எவ்விடத்தும் துன்பம் தருவன பலவாகும், கேண்மோ - அவற்றைக் கேட்பாயாக ;

       காணாய் என்றது இவ்வாற்றின் ஏதந் தருவனவற்றை அறியாய் என்றவாறு. இந் நெறிக்கு என்பது உருபு மயக்கம். மோ - முன்னிலையசை.