|
75
|
மஞ்சளு மிஞ்சியு மயங்கரில் வலயத்துச்
செஞ்சுளைப் பலவின் பரற்பகை யுறுக்கும்
|
|
மஞ்சளும்
இஞ்சியும் மயங்கு அரில் வலயத்து - மஞ்சளும் இஞ்சியு முதலியன தம்முள் கலந்த பிணக்கத்தினையுடைய
தோட்டங்களில், செஞ்சுளைப் பலவின் பரற்பகை யுறுக்கும் - பலாவின் செவ்விய சுளைகளிலுள்ள
விதையாகிய பருக்கைகள் பகையாய் உறுத்தலைச் செய்யும் ;
வலயம் - பாத்தியுமாம். பலாவின் அடிக்கீழ்
மஞ்சள் முதலியன பயிரிடல், 1
"பைங்கறி நிவந்த பலவி னீழல், மஞ்சண் மெல்லிலை" என வருதல்கொண் டுணர்க. உறுக்கும்
- உறுத்தும்.
|
1.
சிறுபாண், 43-4.
|
|