10. நாடுகாண் காதை



கயனெடுங் கண்ணி காதற் கேள்வ
வயலுழைப் படர்குவ மெனினே யாங்குப்



76
உரை
77

       கயல் நெடுங் கண்ணி காதற் கேள்வ - சேலை யொத்த நீண்ட கண்களையுடைய கண்ணகிக்கு அன்பு நிறைந்த கணவனே, வயலுழைப் படர்குவம் எனினே - வயல் நெறியே செல்வேமாயின் ;

       முன்னர்க் கோவலன் என விளித்து மீட்டும் ஈண்டு "கயனெடுங் கண்ணிகாதற் கேள்வ" என விளித்தது, முன்னர்க் கூறியன நினக்கும் ஏதம் தருவன ; பின்னர்க் கூறுவன நினக்கு எத்தகைய அச்சத்தையும் செய்யாவிடினும், கடைகழிந்தறியா இக் காரிகைக்கு அச்சம் விளைக்கும்; அது நினைக்குப் பொறுத்தற்கரிதாகும் என்பதறிவித்தற் கென்க..