|
80
|
பூநா றிலஞ்சிப் பொருகய லோட்டி
நீர்நாய் கௌவிய நெடும்புற வாளை
மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயிற்
கலங்கலு முண்டிக் காரிகை யாங்கண்
|
|
ஆங்கு - அவ்விடங்களில், பூ நாறு இலஞ்சி - மலர்கள் மணங்கமழும் குளங்களில், பொருகயல்
ஓட்டி - தம்முப்பொருகின்ற கயல் மீன்களைத் துரந்து, நீர் நாய் கௌவிய நெடும் புற வாளை
- நீர்நாய் பற்றிய நீண்ட முதுகினையுடைய வாளை, மலங்கு மிளிர் செறுவின் விலங்கப் பாயின்
- மலங்குகள் பிறழ்கின்ற வயற்கண் குறுக்காகப் பாயுமாயின், கலங்கலும் உண்டு இக் காரிகை
- இந் நங்கை அஞ்சுதலு முண்டாம் ;
கயலோட்டுதலை வாளையின் தொழிலாகக் கொள்ளுதலு மமையும். மிளிர்தல் - பிறழ்தல் ;
நெளிதல். |
|