10. நாடுகாண் காதை





குறுந ரிட்ட குவளையும் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீரஞ ரெய்தி
அறியா தடியாங் கிடுதலுங் கூடும்



86
உரை
89

        குறுநர் இட்ட குவளையம் போதொடு - களைபறிப்பார் பறித்து வரப்புகளில் போகட்ட குவளைப் பூவுடனே, பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை - புள்ளிகளையும் கீற்று களையுமுடைய வண்டின் கூட்டங்கள் உள்ளொடுங்கிக் கிடக்கும் இடங்களை, நெறிசெல் வருத்தத்து - வழி நடந்த துன்பத்தினால், நீர் அஞர் எய்தி - நீவிர் சோர்வுற்று, அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும் - உணராது அவ்விடத்து அடியிட்டு நடத்தலுங் கூடும் ;

        குறுதல் - பறித்தல், இதனால் உயிர்க்கொலை போற்றுக எனக் கூறியவாறாயிற்று.