|
100
|
தோமறு கடிஞையுஞ் சுவன்மே லறுவையும்
காவுந்தி யையைகைப் பீலியுங் கொண்டு
மொழிப்பொருட் டெய்வம் வழித்துணை யாகெனப்
பழிப்பருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்
|
|
தோம் அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும் காவுந்தி யையை கைப் பீலியும் கொண்டு - கவுந்தியடிகள்
குற்ற மற்ற பிச்சைப் பாத்திரத்தையும் தோளிலிடும் உறியையும் மயிற்றோகையையும் கொண்டு,
மொழிப் பொருள் தெய்வம் வழித்துணை ஆகென - பொருண் மொழியாகிய தெய்வம் யாம் செல்லும்
நெறிக்கண் துணையாகவென்று, பழிப்பரும் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர் - பழிப்பில்லாத
பெருமையினையுடைய ஒழுக்கத்தொடு வழிச் செலவைப் புரிந்தோராகிய அவர்கள் ;
தோம் - குற்றம். பொருண்மொழியென
மாறுக. தெய்வமாவது பஞ்சமந்திரம் ; அ சி ஆ உ சா என்பன. கொண்டு என்பதனைக் கொள்ளவெனத்
திரித்துத் துணையாக வென்றதனைக் கோவலன் கண்ணகி கூற்றாக்கலுமாம். படர் - செல்கை
; முதனிலைத் தொழிற் பெயர். புரிந்தோர் - வினைப்பெயர். |
|