10. நாடுகாண் காதை


10

அணிகிள ரரவின் அறிதுயி லமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து



9
உரை
10

     அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த - அழகு விளங்கும் அரவணையின்மீது அறிதுயிலைப் பொருந்திய, மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து - நீலமணிபோலும் நிறமுடையோனாகிய திருமாலின் கோயிலை வலம் செய்து நீங்கி ; மணிவண்ணன் என்பது பெயருமாம். அறி துயில்-யாவற்றையும் அறிந்துகொண்டே துயிலுதல் ; துயிலுதல் - பதைப்பின்றி யிருத்தல் ; இதனை யோக நித்திரை என்பர்.