10. நாடுகாண் காதை


கழனிச் செந்நெற் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்



112
உரை
113

        கழனிச் செந்நெல் கரும்பு சூழ் மருங்கின் - வயற் கண் செந்நெலும் கரும்புஞ் சூழ்ந்த இடத்தினையுடைய, பழனத் தாமரைப் பைம்பூங் கானத்து - நீர்நிலைச் செறுவின்க ணுண்டான பசிய பொலிவினையுடைய தாமரைக் காட்டின்கண் ;