|
120
|
உழாஅ நுண்தொளி உள்புக் கழுந்திய
கழாஅமயிர் யாக்கைச் செங்கட் காரான்
சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ் புற்ற
குமரிக் கூட்டிற் கொழும்பல் லுணவு
கவரிச் செந்நெற் காய்த்தலைச் சொரியக்
|
|
உழாஅ நுண் தொளி உள் புக்கு அழுந்திய - உழப்படாத நுண்ணிய சேற்றுட் புக்கு ஆழ்ந்த, கழாஅ
மயிர் யாக்கைச் செங்கட் காரான்-கழுவப் பெறாத மயிரினையுடைய உடலையும் சிவந்த கண்ணினையுமுடைய
எருமை, சொரி புறம் உரிஞ்ச-தினவையுடைய முதுகினை உராய்தலானே, புரி ஞெகிழ்பு உற்ற குமரிக்
கூட்டின் - புரிகள் அறுந்து நெகிழ்தலையுற்ற அழியாத நெற்கூட்டின்கணுள்ள, கொழும் பல் உணவு
- கொழுவிய பலவாகிய பண்டங்கள், கவரிச் செந்நெற் காய்த்தலைச் சொரிய - கவரி போன்ற
செந்நெல்லின் கதிரினிடத்துச் சிந்த ;
தொளி - சேறு. உழாஅ நுண்டொளி -
தானே பட்ட சேறு ; என்றது வயல் வளங் கருதிற்று. காரான் - எருமை. குமரி - அழியாமை.
சோணாட்டின் விளைவு மிகுதி கூறியபடி. |
|