10. நாடுகாண் காதை

125

கருங்கை வினைஞருங் களமருங் கூடி
ஒருங்குநின் றார்க்கு மொலியே யன்றியும்



125
உரை
126

        கருங்கை வினைஞரும் களமரும் - வலிய கையினையுடைய வினையாளரும் களமர்களும், கூடி ஒருங்கு நின்றார்க்கும் ஒலியே அன்றியும் - கூடிநின்று ஒன்றுபட்டொலிக்கும் ஓதையன்றியும் ;

        கருங்கை - வலிய கை. வினைஞர் - பள்ளர், பறையர் முதலாயினோர். களமர் - உழுகுடி வேளாளர். கருங்கைவினைஞர், கருங்கைக்களமர் என்க.