|
140
|
பேர்யாற் றடைகரை நீரிற் கேட்டாங்
கார்வ நெஞ்சமோ டவலங் கொள்ளார்
|
|
பேர் யாற்று அடைகரை நீரிற் கேட்டாங்கு - ஆகிய இவ்வோசைகளைப் பெரிய யாற்றங்கரையில்
முறைமையிற் கேட்டு, ஆர்வ நெஞ்சமொடு அவலம் கொள்ளார் - விருப்பங் கொண்ட உள்ளத்தொடு
வருத்தத்தினைக் கொள்ளாராய் ;
பரந்த வோதையும் (119), ஆர்க்கு
மொலியும் (126), விருந்திற் பாணியும் (131), ஏர் மங்கலமும் (135), முகவைப் பாட்டும்
(137), மகிழிசை ஓதையும் (139) என்னு மிவற்றை அடைகரைக்கண் கேட்டு என்க, இவ்வியற்கை
வளங்களின் காட்சியின்பத்தால் அவலங் கொள்ளாராயின ரென்க. |
|