|
145
|
உழைப்புலிக் கொடித்தே ருரவோன்
கொற்றமொடு
மழைக்கரு வுயிர்க்கும் அழற்றிக ழட்டின்
மறையோ ராக்கிய ஆவுதி நறும்புகை
இறையுயர் மாட மெங்கணும் போர்த்து
மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும்
மங்கல மறையோ ரிருக்கை யன்றியும்
|
|
உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு
- புலியைத் தன்னிடத்துடைய கொடியையுயர்த்தின தேரையுடைய வலியோனாகிய வளவனது வெற்றியோடு,
மழைக்கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில் - மழைக்குக் கருப் பத்தினைத் தோற்றுவிக்கின்ற
அழலை விளக்குகின்ற வேள்விச் சாலையின்கண், மறையோர் ஆக்கிய ஆவுதி நறும்புகை - வேதியர்
ஆக்கிய ஓமத்தின்கண் நல்ல புகை, இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து - இறப்பினையுடைய
ஓங்கிய மாடங்களின் எவ்விடங்களிலும் போர்த்தலான், மஞ்சு சூழ் மலையின் மாணத் தோன்றும்
- மேகஞ் சூழ்ந்த மலைபோல மாட்சிமைப்படக் காணப்படும், மங்கலம் மறையோர் இருக்கை
அன்றியும் - மங்கலம் பொருந்திய அந்தணர்களது இருப்பிடங்களும், அவையேயன்றியும் ;
அட்டில் - ஈண்டு வேள்விச்சாலை. இறை
- இறப்பு. மழைக் கருப்பம் ஆவது புகை. |
|