10. நாடுகாண் காதை




150





155

பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்

உழவிடை விளைப்போர் பழவிற லூர்களும்
பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையிற் றோன்றும்
ஊரிடை யிட்ட நாடுடன் கண்டு
காவத மல்லது கடவா ராகிப்

பன்னாட் டங்கிச் சென்னா ளொருநாள்



148
உரை
155

        பரப்பு நீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர் - நீர் பரந்த காவிரிப்பாவையின் புதல்வரும், இரப்போர் சுற்றமும் - இரப்போரது சுற்றத்தையும், புரப்போர் கொற்றமும் - அரசரது வெற்றியையும், உழவிடை விளைப்போர் - தம் உழுதொழிலின் கண்ணே தோற்றுவிப்போருமாகிய வேளாளருடைய, பொங்கழி ஆலைப் புகையொடு பரந்து - தூற்றாப்பொலி கரும் பாலைப் புகையினால் பரக்கப்பெற்று, மங்குல் வானத்து மலையின் தோன்றும் - இருண்ட மேகம் சூழ்ந்த உயர்ந்த மலைபோலக் காணப்பெறும், பழவிறல் ஊர்களும் - பழைய சிறப்பினையுடைய ஊர்களும் ஆகிய, ஊர் இடை இட்ட நாடு உடன் கண்டு- இவ்விருவகையூர்களும் இடையிடையேயுள்ள நாடெல்லாவற்றையும் கண்டு, காவதம் அல்லது கடவார் ஆகி - ஒருநாளில் ஒரு காத தூரமல்லது நடக்கமுடியாதவராய், பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள் - பல நாட்கள் தங்கிச் செல்லுகின்ற நாளில் ஒருநாள் ;

        விளைப்போருடைய மலையிற்றோன்றும் பழவிறலூர்களும் என்றியைக்க, பொங்கழி - தூற்றாத நெற்பொலி. பரந்து - பரக்க எனத் திரித்தலும் அமையும். கொற்றத்தையும் கருவையும் அட்டிலின் விளைப்போர் இருக்கையும், சுற்றமும் கொற்றமும் உழவிடை விளைப் போர் ஊர்களுமாகிய ஊர் என்க. காவிரிப்பாவை புதல்வர் என்றதனை, 1"வாழி யவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி, ஊழி யுய்க்கும் பேருதவி யொழியாய் வாழி காவேரி" என வருதல் கொண்டுணர்க. உடன்கழிந்தென்றார் இந் நாட்டின் சிறப்புக்களைக் கண்டு கழிதல் அருமையால். புரப்போர் கொற்றத்தை உழவிடை விளைப்போர் என்பதனை, 2"பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர், அலகுடை நீழ லவர்" 3"பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை, ஊன்றுசால் மருங்கி னீன்றதன் பயனே" என்பவற்றானுமறிக.

1. சிலப். 7: 27.    2. குறள். 1034.    3. புறம். 34.