10. நாடுகாண் காதை

170

கழிபெருஞ் சிறப்பிற் கவுந்தி காணாய்
ஒழிகென வொழியா தூட்டும் வல்வினை



170
உரை
171

       கழி பெருஞ் சிறப்பிற் கவுந்தி காணாய் ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை - மிக்க பெருஞ் சிறப்பினையுடைய கவுந்தி ! யாவரானும் ஒழிக்க வொழியாததாய்த் துன்பம் நுகர்விக்கும் தீவினையைக் காண்பாயாக ;

       'ஒழிகென வொழியாது ஊட்டும் வல்வினை' என்பதற்கு நீ "உரிய தன்றீங் கொழிக" என்று கூறவும, ஒழியாவாறு நுகர்விக்கும் தீவினையை என்றலும் பொருந்தும்.