|
|
செறிவன் சினேந்திரன் சித்தன்
பகவன
|
|
செறிவன் - எல்லா வுயிர்கட்கும் இதனாயுள்ளவன் ; சலியாதவன் என்றுமாம்.
சினேந்திரன் - எண்வகை வினைகளையும்
வென்றோன் ;
எண்வகை வினைகளாவன : ஞானாவரணீயம்,
தரிசனாவரணீயம், வேதநீயம், மோகநீயம், ஆயுஷ்யம், நாமம், கோத்திரம், அந்தராயமென
இவை.
சித்தன் - செயத் தகுவனவற்றைச் செய்து
முடித்தோன் ;
கன்மங்களைக் கழுவினோன் என உரைப்பாருமுளர்.
பகவன் - முக்கால வுணர்ச்சியுடையோன்
; |
|