மூலம்
10. நாடுகாண் காதை
180
சினவரன் றேவன் சிவகதி நாயகன
180
உரை
180
சினவரன் - சினத்தைக் கீழ்ப்படுத்தினவன் ;
என்றது சினத்தை வென்றோன் என்றபடி.
தேவன் - தேவர்க் கெல்லாம் முதல்வனாய தேவன்; சிவகதி நாயகன் - வீட்டுலகிற்குத் தலைவனானோன் ;
வீடு சிவகதி யென்னும் பெயரால் சமணர்களாலும் வழங்கப்பட்டிருப்பது சிந்திக்கற்பாலது.