|
|
அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி
|
|
அங்கம்
பயந்தோன் - அங்காகமத்தை அருளினவன்; அருகன் - போற்றத்தக்கான்; அருள்முனி - எல்லா
வுயிரிடத்தும் அருள் கொண்டொழுகும் முனிவன் ;
அங்காகமம் பன்னிரண்டு வகையினை யுடைத்து
எனவும், அவை, ஆசாராங்கம், சூத்திர கிருதாங்கம், ஸ்தானாங்கம், சமவாயாங்கம், வியாக்கியாப்
பிரஜ்ஞப்த்யங்கம், ஞாத்ருகதாங்கம், உபாஸ காத்தியயனாங்கம், அந்தக் கிருத தசாங்கம்,
அநுத்தரோபபாதிக தசாங்கம், பிரச்சிநவியாகர ணாங்கம், விபாக சூத்திராங்கம், திருஷ்டிவாதாங்கம்
என்பன வெனவும் கூறுவர். |
|