10. நாடுகாண் காதை

190

ஓதிய வேதத் தொளியுறி னல்லது
போதார் பிறவிப் பொதியறை யோரெனச்



190
உரை
191

       ஓதிய வேதத்து ஒளியுறின் அல்லது போதார் பிறவிப் பொதி அறையோர் என - மேற்கூறிய பெயர்களையுடைய ஆகமத்தின்கண் விளங்கும் ஒளியாகிய அருகதேவனைச் சார்ந்தாலல்லது பிறவியாகிய மூடப் பெற்ற அறையினுள்ளார் வெளி வாரார் என்று சாரணர் தலைவன் கூற ;

       பொதி யறையோர் ஒளியுறி னல்லது போதார் என்க. பிறவியை இருளறையாகவும் அருகதேவனை அவ் விருளறையினின்று வெளி வருதற்குத் துணையாய விளக்காகவுங் கூறினார். ஓதிய ஆகமமாகிய ஒளியைப் பெற்றாலல்லது போதாரென்றுமாம். பொதியறை - சிறு துவாரமுமின்றி மூடப் பெற்ற கீழ் அறை. 1''புழுக்கறைப் பட்டோர் போன்றுளம் வருந்தாது'' என்றார் பிறரும்.

       ஒருநாள் ஒரு சிறைச் சாரணர் தோன்ற, வீழ்ந்தோர் வந்த காரணம் தெரிந்தோனாயினும் விழுமங் கொள்ளான் காணாய் ஊட்டும் ஒண்ணாது நில்லா ஒளியுறி னல்லது போதார் என என்று முடிக்க.

1. மணிமே, 3 : 95.