ஒரு
மூன்று அவித்தோன் ஓதிய ஞானத் திரு மொழிக்கு அல்லது என் செவியகம் திறவா - எனது செவிகள்
காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்றனையுங் கெடுத்தோனாகிய அருகதேவன் அருளிச் செய்த
பேரறிவு தரும் அறவுரைக்குத் திறப்பினல்லது பிறிதொன்றற்குத் திறவா ; அவித்தல் - அடக்கலுமாம்.