மூலம்
10. நாடுகாண் காதை
ஐவரை வென்றோ னடியிணை யல்லது
கைவரைக் காணினுங் காணா வென்கண்
198
உரை
199
ஐவரை வென்றோன் அடி இணை அல்லது கைவரைக் காணினும் காணா என் கண் - எனது கண்கள் ஐம்புலன்களையும் வென்றோனுடைய இரண்டு திருவடிகளைக் காண்பதல்லது மற்றைக் கடவுளர் அடிகளைக் கையகத்தே காணினும் காணா ;
ஐவர் - செறலின் வந்த திணை மயக்கம்.