அருளறம் பூண்டோன் றிருமெய்க் கல்லதென்
பொருளில் யாக்கை பூமியிற் பொருந்தாது
200
உரை
201
அருள்
அறம் பூண்டோன் திரு மெய்க்கு அல்லது என் பொருள் இல் யாக்கை பூமியிற் பொருந்தாது
- எனது பயனில்லா இவ் வுடல் அருளையும் அறத்தினையும் மேற் கொண்டோனுடைய திருவுடலத்திற்கல்லது
பிறிதொன்றற்குப் பூமியிற் பொருந்தாது ;