10. நாடுகாண் காதை



இறுதியி லின்பத் திறைமொழிக் கல்லது
மறுதர வோதியென் மனம்புடை பெயராது



206
உரை
207

       இறுதி இல் இன்பத்து இறை மொழிக்கு அல்லது மறு தர ஓதி என் மனம் புடைபெயராது - எனதுள்ளமும் முடிவிலா இன்பத்தினையுடைய இறைவன் அருளிச் செய்த ஆகமத்தை உருவேற ஓதிப் புடைபெயர்தலல்லது பிறிதொரு மொழியை ஓதிப் புடைபெயராது ;

மொழி - ஆகமம்; ஆகுபெயர். மறுதர ஓதுதல் - மீட்டும் மீட்டும் ஓதுதல்.