10. நாடுகாண் காதை



30

கலையி லாளன் காமர் வேனிலொடு
மலய மாருதம் மன்னவற் கிறுக்கும்

பன்மல ரடுக்கிய நன்மரப் பந்தர்
இலவந் திகையி னெயிற்புறம் போகித்



28
உரை
31

       கலையிலாளன் காமர் வேனிலொடு மலய மாருதம் மன்னவற்கு இறுக்கும் - சோழ அரசனுக்குக் காமன் அழகிய வேனிலொடு பொதியிற் றென்றலையும் திறையிடுகின்ற, பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் இலவந்திகையின் எயிற்புறம் போகி - பல மலர்களை நிரைத்த நல்ல மரநிழலையுடைய இல வந்திகையினது மதிலின்புறத்தே சென்று :

       கலையிலாளன் - அநங்கன் ; மன்மதன். பந்தர் - நிழல். இலவந்திகை - நீராவியைச் சூழ்ந்த வயந்தச் சோலை ; அஃது அரசனும் உரிமையுமாடுங் காவற் சோலை. இதனை நீராவி என்பாருமுளர். மன்னவற்கு வேனிலொடு மாருதத்தினை இறுக்கும் இலவந்திகை எனக் கூட்டுக. இனிப் பந்தர் என்பதற்குச் சோலை எனப் பொருள் கொண்டு, சோலையினையும் நீராவியினையுமுடைய எயில் எனலுமாம்.