10. நாடுகாண் காதை


215

காரணி பூம்பொழிற் காவிரிப் பேர்யாற்று
நீரணி மாடத்து நெடுந்துறை போகி



214
உரை
215

       கார் அணி பூம்பொழிற் காவிரிப் பேர் யாற்று-முகிலையணிந்த மலர் நிறைந்த சோலைகளையுடைய காவிரியாகிய பெரியயாற்றின், நீர் அணி மாடத்து நெடுந்துறை போகி - நெடுந்துறையைப் பள்ளியோடத்தானே போந்து, மாதரும் கணவனும் மாதவத்தாட்டியும் தீது தீர் நியமத் தென்கரை எய்தி - கண்ணகியும் அவள் கணவன் கோவலனும் கவுந்தியடிகளும் குற்றம் தீர்ந்த கோயிலையுடைய தென்கரையை அடைந்து, போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி - மலர் சூழ்ந்து கிடக்கின்ற ஓர் பொலிவு பெற்ற சோலைக்கண் சென்றிருந்தபொழுது;

நீரணிமாடம் - பள்ளியோடம். மாதருங் கணவனும் மாதவத் தாட்டியும் போகி என்க.

காவுந்தி கேட்டு மேற்கொண்டு திறவா நவிலாது காணா பொருந்தாது குவியா பொறாது புடைபெயராது   என்று ஏத்த அதற்கு ஒன்றிய மாதவர் ஓங்கி நிவந்து நீங்கி கெடுகென்று படர்வோர்த் தொழுது   பணிந்தனர் போந்து போகி எய்தி இருந்துழி என்க.