|
220 |
மாதரும் கணவனும் மாதவத் தாட்டியும்
தீதுதீர் நியமத் தென்கரை யெய்திப்
போதுசூழ் கிடக்கையோர் பூம்பொழில் இருந்துழி
வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு
கொங்கலர் பூம்பொழிற் குறுகினர் சென்றோர்
|
|
வம்பப்
பரத்தை வறுமொழி யாளனொடு - புதிய பரத்தைத் தன்மை யுடையாளொருத்தியும் பயனில சொல்லும்
விடனொருவனும், கொங்கலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர் - மணம் பரந்த பொலிவினையுடைய
சோலைக்கண் அணுகினராய்ச் சென்றவர் ;
வம்பு - புதுமை, வம்பப் பரத்தை என்பதற்குத்
தன் மனவெழுச்சியால் தோன்றினபடி சொல்லித் திரியும் பரத்தை எனலுமாம். வறு மொழியாளன்
- விடன். சென்றோர் - வினைப்பெயர். |
|