10. நாடுகாண் காதை



காமனுந் தேவியும் போலும் ஈங்கிவர்
ஆரெனக் கேட்டீங் கறிகுவம் என்றே



221
உரை
222

       காமனும் தேவியும் போலும் ஈங்கிவர் - இவ்விடத்துக் காமனும் அவன் தேவியுமாகக் காணப்படுகின்ற இவர், ஆரெனக் கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே - யாரென்று கேட்டு இப்பொழுது அறிவோம் என்று சொல்லி ;

       போலும் - ஒப்பில்போலி. இனி, இப் போலும் என்பதனை உவம வுருபாக்கிப் பொருள் கூறலு மமையும்.