|
|
நோற்றுணல் யாக்கை நொசிதவத்
தீருடன்
ஆற்றுவழிப் பட்டோர் ஆரென வினவவென்
|
|
நோற்றுணல்
யாக்கை நொசி தவத்தீர் - விரதத்தினை மேற்கொண்டு பட்டினி கிடந்துண்ணுதலான் இளைத்த
யாக்கையினையும் நுண்ணிய தவத்தினையுமுடையீர், உடன் ஆற்று வழிப்பட்டோர் ஆரென வினவ
- நும்மொடு வழிவந்த இவர் யாரென்று வினவ ;
நொசி - நுண்மை ; நொசி யாக்கை
யெனலுமாம். ஆற்றுவழிப்பட்டோர் - வழியிற் கூடி வந்தோர். நோற்றுணல் - பட்டினி கிடந்துண்ணல். |
|