10. நாடுகாண் காதை


225

நோற்றுணல் யாக்கை நொசிதவத் தீருடன
மக்கள் காணீர் மானிட யாக்கையர்
பக்கம் நீங்குமின் பரிபுலம் பினரென



224
உரை
226

       என் மக்கள் காணீர் மானிட யாக்கையர் - இவர் என்னுடைய மக்களாவார், நீர் கூறிய காமனும் தேவியுமல்லர், மானிட யாக்கையுடையார் காணும் ; பக்கம் நீங்குமின் பரிபுலம் பினர் என - வழிச்செலவின் வருத்தத்தினால் மிகவும் வருந்தினர் அவரிடைச் செல்லாதே விலகிச் செல்லுமின் என்றுரைக்க;

பரி - மிகுதி. பரி புலம்பினர் என்பதற்குச் செலவினால் வருந்தினர் எனக் கூறலுமாம். பரி - செலவு.