10. நாடுகாண் காதை



உடன்வயிற் றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவது முண்டோ கற்றறிந் தீரெனத்



227
உரை
228

       உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கைக் கடவதுமுண்டோ கற்றறிந்தீர் என - நூல்களைக் கற்று அவற்றின் பயனை யுணர்ந்த பெரியீர், ஒரு வயிற்றிற் பிறந்தோர் கணவனும் மனைவியுமாய்க் கூடி வாழ்க்கை நடாத்தல் என்பது நீர் கற்ற நூல்களிற் கூறப்படுதலுமுண்டோ எனக் கேட்ப ;

கற்றறிந்தீர் என்றது இகழ்ச்சி தோற்றி நின்றது.