|
|
சாபவிடை செய்து தவப்பெருஞ் சிறப்பின
காவுந்தி யையையுந் தேவியுங் கணவனும்
முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென்
|
|
தவப்
பெருஞ் சிறப்பிற் காவுந்தியையையும் தேவியும் கணவனும் - தவத்தானே மிக்க சிறப்பினையுடைய
கவுந்தியடிகளும் கண்ணகியும் கோவலனும், முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய - முறம்
போலுஞ் செவியினையுடைய யானையை முன்னர்ச் சமரிடத்துக் கெடுத்த, புறஞ்சிறை வாரணம் புக்கனர்
புரிந்தென் - புறத்தே சிறகினையுடைய கோழி என்னும் நகரின்கண் விரும்பிப் புக்கார்
என்க.
முற்காலத்து ஓர் கோழி யானையைப் போர்
தொலைத்தலான் அவ்விடத்துச் செய்த நகர்க்குக் கோழி என்பது பெயராயிற்று. அந்நகர்
காணும்பொழுது சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனால் புறஞ்சிறை வாரணம் எனப்பட்டது என்பர்
அரும்பதவுரை யாசிரியர். புறம் சிறை வாரணம் - புறத்தே இறகினையுடைய கோழி, புறத்தே
சேரிகளையுடைய கோழியூர் எனப் பொருளுரைப்பார் அடியார்க்கு நல்லார்.
சென்றோர் அறிகுவமென்று வினவ புலம்பினரென
கடவது முண்டோ எனக் கேட்டுப் புதைத்து நடுங்க முதுநரியாகென அறியார் கேட்டு நடுங்கி உரையீரோவென
ஒதுங்கி உழந்த பின் பெறுக எனச் செய்து புரிந்து புக்கனர் என்க. |
|