மூலம்
10. நாடுகாண் காதை
தாழ்பொழி லுடுத்த தண்பதப் பெருவழிக்
காவிரி் வாயிற் கடைமுகங் கழிந்து
32
உரை
33
தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக் காவிரி வாயிற் கடை முகம் கழிந்து - தாழ்ந்த சோலை இருமருங்கிலும் சூழ்ந்த புனலாட்டிற்குச் செல்லும் பெரிய நெறியினையுடைய காவிரிக் கரையிடத்துச் சங்கமுகத்துறை வாயிலையும் நீங்கி ;
காலையில் நாணீராடுவோர் பிறர்முகம் நோக்காது போதற்கு மறைந்து செல்வர் ; இவரும் அங்ஙனமே சென்றனர் என்பதற்குக் கடைமுகங் கழிந்தென்றார்.