10. நாடுகாண் காதை








5





10





15





20
           கட்டுரை

முடியுடை வேந்தர் மூவ ருள்ளும்
தொடிவிளங்கு தடக்கைச் சோழர்குலத் துதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும

விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும
ஒடியா வின்பத் தவருறை நாட்டுக
குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்

அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும
பரந்திசை யெய்திய பாரதி விருத்தியும
திணைநிலை வரியும் இணைநிலை வரியும
அணைவுறக் கிடந்த யாழின் றொகுதியும்
ஈரேழ் சகோடமும் இடநிலைப் பாலையும்

தாரத் தாக்கமும் தான்தெரி பண்ணும்
ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும்
என்றிவை யனைத்தும் பிறபொருள் வைப்போ
டொன்றித் தோன்றுந் தனிக்கோள் நிலைமையும்

ஒருபரிசா நோக்கிக் கடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று.


1
உரை
20

      முடியுடை வேந்தர் மூவருள்ளும் - முடியுடை யரசராகிய சோழர் பாண்டியர் சேரர் என்னும் மூவருள்ளும், தொடி விளங்கு தடக்கைச் சோழர் குலத்து உதித்தோர் - வீரவளை விளங்கும் பெரிய கையையுடைய சோழர் குலத்துப் பிறந்தோருடைய, அறனும்...... என்றிவை அனைத்தும் - அறன் முதலாகப் பாணியீறாகவுள்ள அனைத்தும், பிற பொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் - ஈண்டுச் சொல்லாத பிறபொருள்களின் கிடக்கையோடு பொருந்தித் தோன்றும் ஒப்பற்ற முறைமையின் நிலைபேறும், ஒரு பரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம் முற்றிற்று - ஒரு படியாக நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம் முற்றியது.

அடிகள் இக் காண்டத்துக் கூறிய பொருள்கள் இன்னின்ன வென இதன்கட் குறிப்பிடுகின்றார். அவற்றுள்,

அறன் - அறனோம்படை (5 : 179.),

மறன் - இமயத்துப் புலி பொறித்தது. (5 : 97--8.)

ஆற்றல் - அமராபதி காத்தது. (6 : 14.)

மூதூர்ப் பண்பு மேம்படுதல் - ஒடுக்கங் கூறாமை. (1 : 18.)

விழவு மலி சிறப்பு - இந்திர விழவு (5.),

விண்ணவர் வரவு (6 : 72--3.)

குடி - உழவிடை விளைப்போர். (10 ; 150.)

கூழின் பெருக்கம் - செந்நெற் காய்த்தலையில் கூட்டின் நெற் சொரிதல். (10 : 123--4.)

காவிரிச் சிறப்பு - ''கரியவன் புகையினும்.........ஒலிக்கும்'' (10 : 102--9)

பொய்யா வானம் புதுப்புனல் பொழிதல் - மழைக்கரு வுயிர்த்தல். (10 : 143.)

அரங்கும் ஆடலும் தூக்கும். (3).

வரி - கண்கூடுவரி முதலிய எட்டுவரியும். (8 : 74--108)

பாரதி விருத்தி - பதினோராடல் (6 : 39--63.)

திணைநிலைவரி (7 : 17--23.)

இணைநிலைவரி (7.)

யாழின் றொகுதி - ''சித்திரப்படம்'' முதல் ''பட்டடை'' ஈறாகவுள்ளன. (7 : 1)

''உழைமுதற் கைக்கிளை'' முதலாயினவுமாம் (8 : 32.)

ஈரேழ் சகோடம் - ''ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி'' (3 : 70.)

இடநிலைப் பாலை - ''கோடி விளரிமேற் செம்பாலை'' முதலாயின (3 : 88.)

தாரத் தாக்கம் (8 : 38.)

தான்றெரி பண் - அகநிலை மருதம் முதலாயின. (8 : 39--40)

ஊரகத்து ஏர் - ஊரின் வண்ணம் (5.)

ஒளியுடைப் பாணி - ''வெங்கட் டொலைச்சிய விருந்திற் பாணி'' முதலாயின. (10 : 131.)